அடையாளம் தெரியாத பெட்டியால் பரபரப்பு - விரைந்த வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர்

Home

shadow

                      தருமபுரி நான்கு வழி சாலையில் உள்ள அதியமான்-அவ்வையார் சிலையின் கீழ் இருந்த அடையாளம் தெரியாத பெட்டியால் பரபரப்பு ஏற்ப்பட்டது..


தருமபுரி நகரின் மையப்பகுதியான நான்கு ரோட்டில் அதியமான் -அவ்வையார் சிலை உள்ளது. இந்த சிலையின் கீழ் இன்று காலை அடையாளம் தெரியாத பெட்டி கிடப்பதாக தருமபுரி நகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து   காவல் துணை கண்காணிப்பாளர் ராஜகுமார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் நேரில் வந்து அப்பெட்டியை தனியாக கொண்டு சென்று  திறந்து  பரிசோதனை செய்யதனர்.பெட்டியை திறந்து பரிசோதனை செய்த போது பெட்டியில் சாமிப்போட்டோ, மஞ்சள்,குங்குமம், விபூதி,லேக்கியம் பாட்டில், குடும்பபோட்டோ,டைரி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இதனையடுத்து யார் இந்த பெட்டியை வைத்தது சென்றனர் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா உதவியோடு காவல்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் தருமபுரி நகரின் மையப்பகுதியில் கிடந்த இந்த பெட்டியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பான செய்திகள் :