அத்திவரதரை குளத்திற்குள் வைக்கக்கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஐீயர் வேண்டுகோள்

Home

shadow

                அத்திவரதரை குளத்திற்குள் வைக்கக்கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஐீயர் வேண்டுகோள்

அத்தி வரதரை காண திருப்பதியை விட அதிக கூட்டம் வருவதால், மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஐீயர் தெரிவித்துள்ளார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது.

உலக பிரசித்திப் பெற்ற இந்த அத்தி வரதர் திருவிழாவிற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் அத்திரவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

இதனால் நாளுக்கு நாள் அத்திவரதரை காண கூட்டம் அலைமோதுகிறது. எதிர்பார்த்ததைவிட அதிகமாக அத்தி வரதரை காண பக்தர்கள் வருவதால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஐீயர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்தி வரதரை பூமிக்கடியில் புதைத்தோம். தற்போது அது தேவையில்லை என கூறினார்.

இது தொடர்பாக, கோவில் மடாதிபதிகளுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :