அத்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்

Home

shadow

              அத்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் 

                காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. உலக பிரசித்திப் பெற்ற இந்த அத்திவரதர் திருவிழாவிற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் இன்று குடும்பத்துடன் வருகை தந்தார். குடியரசுத் தலைவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உடன் வந்தார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் பிற்பகலில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, மதியம் 3 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்.இது தொடர்பான செய்திகள் :