அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் - இன்று விசாரணைக்கு வரும் பொதுநல மனுக்கள்

Home

shadow

               ஆகமவிதிகள் எதுவும் இல்லாததால், அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரைச் சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வெளியே எடுக்க வேண்டும் என்றும்   48 நாள்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என எந்தவொரு ஆகம விதிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்திவரதர் சிலையை இன்னும்  சில நாள்கள் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் வெளியில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில்  கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் வி.கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் இன்று   விசாரணைக்கு வரவுள்ளன. இந்நிலையில் அத்திரவரதர் தரிசனம் 47 ஆம் நாளான இன்றுடன் முடிவடைந்து,  நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படவுள்ளார்

இது தொடர்பான செய்திகள் :