அனைத்து தேர்தல் பணிகளும் இன்று ஆய்வு - கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி

Home

shadow

                     இளைஞர்கள் அதிகமாக உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை அடையாளம் கண்டு வாக்களிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட  பகுதிகளிலும்,  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய பகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு தலா ஒருவர் என 2 பொது பார்வையாளர்கள் வருகை தந்து அனைத்து தேர்தல் பணிகளையும் இன்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் அதிகமாக உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை அடையாளம் கண்டு வாக்களிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் , தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ஒரு கோடியே 50லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :