அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Home

shadow

             அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

             நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல்கள் அளித்ததால், அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

             நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பபட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்தது. இந்த விவாகாரம் சட்டசபையில் இன்று எதிரொலித்தது.

சட்டசபையில் நீட் நிராகரிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாவை, மத்திய அரசு 19 மாதங்களுக்கு முன்பே திருப்பி அனுப்பியுள்ளது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது என கேள்வி எழுப்பினார். மேலும், அமைச்சர் சி.வி.சண்முகம் நீட் மசோதா தகவலை மறைத்ததற்காகவும், தவறான தகவலை அளித்ததற்காகவும், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாகவே தகவல் வந்தது, நான் கூறியது தவறு என்றால் பதவி விலகவும் தயார் எனக் கூறினார்.

அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :