அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல்

Home

shadow

               அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சசிகலா, தினகரன் ஒரு அணியாகவும், பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. இதில் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணி அதிமுகவுக்கான முழு உரிமையை கைப்பற்றியதை தொடர்ந்து, தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக தினகரனும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் கட்சியாக பதிவு செய்யமால தொடர்ந்து, அதிமுகவிற்கு உரிமை கோரி வந்தனர். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கூட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :