அரியலூர் - தென்னை மரம் ஏறும் இளம் பெண்கள்

Home

shadow


         அரியலூரில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி இன்று நடைபெற்றது.

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூா் கிராமத்தில் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய தென்னை வளர்ச்சி கழகம் சார்பில்  விவசாயிகளுக்கு தென்னை வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு உள்ளனர். கருவியைக் கொண்டு தென்னை மரம் ஏறுவது எப்படி என விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள் இயற்கை முறையில் தென்னை மரம் சாகுபடி செய்வது பற்றி தெரிந்து கொண்டனர். தற்போது உள்ள காலகட்டத்தில் தென்னை மரம் ஏறுவதற்கு ஆள் கிடைக்காத சூழ்நிலையில், இந்தக் கருவியைக் கொண்டு மரத்தில் ஏறி, இளநீர் தேங்காய் மட்டைகளை பறிப்பதற்கு ஏதுவாக உள்ளதாகவும், மாவட்டத்தில் அதிகப்படியாக தென்னை மரங்களை சாகுபடி செய்ய தயாராக இருப்பதாகவும் இளைஞர்கள் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :