அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மறு வாக்குப்பதிவு

Home

shadow

   

        தேர்தல் தினத்தில் ஏற்பட்ட வன்முறை, வாக்குப்பதிவில் நடைபெற்ற முறைக்கேடு ஆகியவற்றின் காரணமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான 19 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ஆம் தேதி 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றதுஅருணாச்சல் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்றது. வாக்குப்பதி்வின் போது ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்றன. மேலும், வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், தேர்தல் தினத்தில் ஏற்பட்ட வன்முறை, வாக்குப்பதிவில் நடைபெற்ற முறைக்கேடு ஆகியவற்றின் காரணமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 19 தொகுதிகளுக்கு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேச கிழக்கு மக்களவை தொகுதியின் 6 வாக்குச் சாவடிகளிலும், அருணாச்சல பிரதேச மேற்கு மக்களவை தொகுதியின் 13 வாக்குச் சாவடிகளிலும், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வாக்குப்பதிவானது நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்திகள் :