ஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

Home

shadow

                  காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நிறைவடைந்ததையொட்டி ஆகம விதிப்படி அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்..


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சுவாமி கோவிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி,  இந்த மாதம் 17ம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெற்றது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுனர் பண்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட  பிரமுகர்களும், தமிழக அமைச்சர்கள் பலரும்  அத்திவரதரை தரிசனம் செய்தனர்.  இதையடுத்து,  48 வது நாளான நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் மீண்டும் அத்திவரதர் சயன நிலையில் வைக்கப்பட்டார். இந்த நிகழ்வை முன்னிட்டு பட்டாச்சாரியார்கள், வல்லுநர் குழு , பணியாளர்கள்  உட்பட 253 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, அத்திவரதர் காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது.  அத்திவரதரை சுமார் ஒரு கோடியே 7 ஆயிரத்து 500 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், கோவில் உண்டியலில் 7 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இது தொடர்பான செய்திகள் :