ஆத்தூர் கெங்கவல்லியில் இரு சக்கர வாகனம் மீது மினி வேன் மோதியதில் இரண்டுபேர் உயிரிழந்தனர்

Home

shadow

                          ஆத்தூர் கெங்கவல்லியில் இரு சக்கர வாகனம் மீது மினி வேன் மோதியதில் இரண்டுபேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை எடப்பாடிமலைப்பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது இருசக்கரவாகனத்தில் தனது உறவினர்களான ராமசாமி மற்றும் கனகரானுடன் கெங்கவல்லியில் உள்ளமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கெங்கவல்லி நோக்கி முலாம் பழம் ஏற்றிவந்தமினி வேன் எதிர்பாராதவிதமாக பொன்னுசாமியின் இருசக்கரவாகனத்தின் மீது மோதிவிபத்துக்குள்ளானதுஇந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற பொன்னுசாமி மற்றும் ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தகனகராஜ் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை கெங்க வல்லிமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்

இது தொடர்பான செய்திகள் :