ஆத்தூர் - திருமண மண்டபத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாணவர் கைது

Home

shadow


ஆத்தூர் அருகே ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு தனியார் திருமண மண்டபத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம் பாளையத்தில் ஒரு தனியார்  திருமண மண்டபம் உள்ளதுஇதில் மேலாளராக பணியாற்றுபவர் பழனிவேல் இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட ஒருவர்பழனிவேலிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் . இதை தராதபட்சத்தில் அந்த திருமண மண்டபத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மேலாளர் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வு செய்த காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் போலி என்றும் அதே நாளில் ஆத்தூரில் உள்ள ஒரு நகைக்கடை மற்றும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையும் கண்டறிந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த செல்போன் எண்ணை கண்காணித்ததில் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது தலைவாசல் பகுதியை சேர்ந்த மாதவன் என்கிற 19 வயது மாணவர் என்பதும் விளையாட்டுக்காக இந்த மிரட்டல்களை விடுத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாதவனை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :