ஆமை வேகத்தில் நடைபெறும் முக்கொம்பு மேலணை பணிகள்

Home

shadow

           முக்கொம்பு மேலணை பணிகள்  குறித்து, அணை பகுதி விவசாயிகள் வேள்வி எழுப்பியுள்ளனர்.


மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் வழியாக மாயனூர் தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணையை அடையும். பின்னர் முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாக பிரிந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சில மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கும் வகையிலும் உள்ளது.  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆகஸ்டு 22 ஆம் தேதி இரவு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  தற்போது அணையின் நிலவரம் குறித்து பேசிய உதவி செயற்பொறியாளர் மேட்டூரில் தமிழக முதலமைச்சர்  திறந்து வைக்கப்பட்ட காவிரி நீர் தற்போதைய நிலவரப்படி 65  மயில் கடந்து வந்து கொண்டிருப்பதாகவும் நாளை அதிகாலை திருச்சி வந்தடையும் எனவும் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும் பட்சத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.    இது குறித்து பேசிய  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கொள்ளிட முக்கொம்பு அணை பொருத்தவரை கடந்தாண்டு அதிக தண்ணீர் வந்ததால்  எட்டுக்கும் மேற்பட்ட மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும்  தமிழக  முதலமைச்சர்  ஆய்வுக்கு பிறகு புதிய பாலம் மற்றும் மதகுகள் அமைக்க நிதி ஒதுக்கியும் மிகத் தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டு ஆறு மாத காலத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது என்றும்  ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது பணிகள் முடிவடையாமல் உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :