ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மணல் ஏற்றிச்சென்ற மாட்டு வண்டி மீது மினி பேருந்து மோதி 10 பேர் காயம்

Home

shadow

                            ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மணல் ஏற்றிச்சென்ற மாட்டு வண்டி மீது மினி பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்  2  மாடுகள் உயிரிழந்தன.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வாணியம்பாடியிலிருந்து வந்த மினி பேருந்து, ஆனந்தன் என்பருடைய மாட்டு வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். அத்துடன் இரண்டு மாடுகளும் உயிரிழந்தன. காயமடைந்த அனைவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :