ஆயிரத்து 470 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Home

shadow

            ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 470 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சிங்காரம், பெங்களூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மினி லாரியின் மூலமாக எரிசாராயத்தை கேன்களில் கடத்தி வந்து பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதாக திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்  அடிப்படையில் புள்ளானேரியில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கோவில் மாடியில்  42 கேன்களில் பதுக்கி வைத்திருந்த சுமார்  ஆயிரத்து 470 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிங்காரத்தை கைது செய்த காவல் துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர். கோவிலுக்குள் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பான செய்திகள் :