ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக கேள்வி

Home

shadow


தேசிய அளவில் தமிழகத்தில்தான் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுவதாக குறிப்பிட்டார். மேலும் பிரசவத்திற்கு பிறகு 16 வகையான பொருட்கள் வழங்கப்படுவது போன்ற திட்டங்களால் அரசு மருத்துமனைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். பின்னர் உசிலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்குப் பிறகு தாயும் சேயும் இருப்பதற்கு தனி அறைகள் கட்டப்படுவதுடன்பிற மேம்பாட்டுப் பணிகளும்  மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :