ஆர்.கே.நகரில் டோக்கன் பணப்பட்டுவாடா தொடர்பாக கைகலப்பு மோதலில்ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Home

shadow

ஆர்.கே.நகரில் டோக்கன் பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 7 பேரை பிடித்த போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. ஆளுங்கட்சி சார்பில் ஏற்கெனவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் டோக்கன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த சிலர், முகவர்களை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பதாக மாறியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட 6 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், எஞ்சிய 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :