ஆவடி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டதால், அந்த மார்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Home

shadow

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு ஆவடி அருகே தடம் புரண்டது. இதில் ரயிலின் எஞ்சின் மற்றும் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த விபத்தால் அச்சம் அடைந்த ரயில் பயணிகள் உடனே ரயிலைவிட்டு இறங்கினர். இதனால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் பயணிகள் நீண்டதூரம் நடந்து சென்று பேருந்து மற்றும் ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கு சென்றனர்

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே விரைவு ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :