ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

Home

shadow              உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கேரி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். 49 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்து. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அதிகபட்சமாக ஜேசன் ராய் 89 ரன்களும், ஜோ ரூட் 49 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :