இந்தி தமிழக அரசு விளக்கம்

Home

shadow

           அரசு விரைவு பேருந்தில் இடம் பெற்றிருந்த இந்தி வாசகம் நீக்கப்பட்டு விட்டதாக போக்குவரத்ததுறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசரவழி’, ‘தீயணைப்பு கருவிபோன்ற வாசகங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழில் இல்லாமல் இந்தியில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பேருந்தில்  அவசரகால வழிக்கான ஸ்டிக்கரில் ஆங்கிலத்தோடு, இந்தி மொழியிலும் எழுதப்பட்டிருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அது உடனடியாக சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :