இன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்

Home

shadow

                காஞ்சிபுரம் அத்திவரதர் இன்று மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே கொண்டு வரப்பட்ட அத்திவரதர் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். இந்த நிலையில் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது. தைல காப்பு மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, இன்று இரவு 9 மணி அளவில், அத்திவரதர், அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படுகிறார். இரவு 11 மணிக்குள் இந்த வைபவம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள 80 பட்டாச்சாரியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :