இன்று தமிழகத்தில் நிழல் இல்லாத நாள்

Home

shadow

                இன்று தமிழகத்தில் நிழல் இல்லாத நாள் 
               
                சூரியன் சரியாக தலைக்கு மேல் வரும்போது நிழல் பூஜ்ஜியமாகும். இதனையே வானிலை ஆய்வாளர்கள் நிழல் இல்லா நாள் என்று கூறுகின்றனர் . இந்த அறிய நிகழ்வு ஆண்டிற்கு இருமுறை மட்டுமே நிகழும். இதேபோல் இந்நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒன்றாக நிகழ்வதில்லை. இந்நிலையில் இந்த.நிகழ்வு, சென்னையில் இன்று நிகழ்ந்தது . இதனைக் காண பொதுமக்களுக்கு சென்னை பிர்லா கோளரங்கில்  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரியாக 12.07 -க்கு சூரியன் தலைக்கு மேல வந்தபோது இந்த அறிய நிகழ்வை  பொதுமக்களும்  மாணவ மாணவிகளும் கண்டு  மகிழ்ந்தனர். இதேபோல் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 21 - ஆம் தேதியும் ஆகஸ்டு - 21 -ஆம் தேதியும் நிழல் இல்லாத நாள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :