இரட்டை இலை – சசி சீராய்வு மனு தாக்கல்

Home

shadow

                      இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு வழங்கியதை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு தாக்கல்

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலாவும் டிடிவி தினகரனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா சார்பில் அவருடைய வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அமமுக அமைப்பை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அந்தக் கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் சசிகலாவை நிராகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை சசிகலா தொடர்வார் என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சட்டப் போராட்டத்தில் தன் நேரத்தைச் செலவழிக்க விரும்பவில்லை என்றும், கட்சிப் பணிகளைப் பார்க்கப் போவதாகவும் அவர் கூறிவிட்டார். தன் நடவடிக்கைகள் அனைத்திற்கும் சசிகலாவின் ஆதரவு இருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :