இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

Home

shadow

                   இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்ப்பட்ட இடங்களில் நில அதிர்வு  ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் , தளவாய்புரம், இளம்திரைகொண்டான், கொல்லகொண்டான், மூகவூர், சுந்தரராஜபுரம், கம்மாபட்டி, நக்கனேரி, மற்றும் பல்வேறு பகுதிகளில் 2 முறை பலத்த வெடி சப்தம் கேட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்   மிகுந்த அச்சத்துடன்  வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  பேரிடர் மேலாண்மை வட்டாச்சியர் தகவல் கொடுக்கப்பட்டு , சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் ஆய்வு செய்ததில் விருதுநகர் பகுதியில் சிறிய நிலஅதிர்வு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :