இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்

Home

shadow

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 20வது பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர், இன்று காலை சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். மீனவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :