இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பது தான் அ.தி.மு.க வின் லட்சியம் - தம்பித்துரை

Home

shadow

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ்தி.மு. கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பது தான் .தி.மு. வின் லட்சியம்  என கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்தார்.

 

நடைபெற உள்ள 17 வது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, .தி.மு. கட்சியின் சார்பில் கரூர் வேட்பாளராக அத்தொகுதியின் தற்போதைய எம்.பி யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, தமிழகத்தில் வெற்றிக்கூட்டணியை .தி.மு. மற்றும் பா.. கட்சி உருவாக்கி இருக்கின்றது என்றும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களுக்கு பல நல்லதிட்டங்கள் வந்து சேரும் என்பதற்காகவே, பாரதிய ஜனதாவும் .தி.மு. கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது என தெரிவித்தார். தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் போராடுவது தான் தங்கள் கட்சியின் லட்சியம், தனது லட்சியம்என தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ்தி.மு. கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பது தான் .தி.மு. வின் லட்சியம்  என்றும் கூறினார். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :