ஈரோட்டில் உலக சிறுநீரக பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

Home

shadow

 

        ஈரோட்டில் உலக சிறுநீரக பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

உலக சிறுநீரக பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறுநீரகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஈரோட்டில் இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து சிறுநீரகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுநீரக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றதுஈரோடு மாவட்ட மருத்துவ துறையின் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமாமணி தலைமை ஏற்று விழிப்புணர்வு பேரணியையும் கருத்தரங்கையும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :