உசிலம்பட்டி அரசுப்பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

Home

shadow

 

         மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் அரசுப்பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டர்  அருகே தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் செல்லம்பட்டியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ஆட்டோவும்  நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஒட்டுநர் உட்பட் ஏழுபேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும்  மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து உசிலம்பட்டி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பான செய்திகள் :