உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு - துரைமுருகன்.

Home

shadow

                  அண்மையில் தமிழகத்தில்  நடந்த அஞ்சல் தேர்வில் தமிழ் மொழியை இணைக்ககோரி,  தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி அஞ்சல் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெற்றது.

இதனை கண்டித்து திமுகவினர் இன்று  சட்டப்பேரவையில் அஞ்சல் தேர்வை தமிழில் நடத்த தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறினர். மேலும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடந்து முடிந்த தபால் தேர்வினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு அதிமுக தரப்பிலிருந்து பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ’இரு மொழிக்கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு இந்தி திணிப்பை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளாது. இது குறித்து நீங்கள் மக்களவையில் பேசுங்கள். நாங்கள் மாநிலங்கவையில் வலியுறுத்துகிறோம்,’ என்று கூறினார். இதனை சரியான பதிலாக ஏற்றுக்கொள்ளாத திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து  தீர்மானத்தை நிறைவேற்ற அரசு ஒப்புக்கொள்ளாததால் திமுகவினர் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இதனையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு பதில் அளித்தால்தான் தமிழக அரசு முடிவு எடுக்க முடியும் என்றார் மேலும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பை நோக்கமாக கொண்டு இவ்வாறு பிரச்சனைகளை எழுப்புகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

வெளிநடப்பு செய்த திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். ’இந்தி திணிப்பு குறித்த எங்களது உணர்வுகளை முதலமைச்சர் கொச்சைப்படுத்துவதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்,’ என்று அவர் கூறினார். மேலும் மத்திய அரசு இந்தியை திணித்தலும் அதிமுக அரசு அதனை ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :