உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி

Home

shadow

 
                              அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு, தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 4ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த மாநாட்டை நடத்த நிதி உதவி அளித்திட வேண்டுமென உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கிடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இதேபோல், இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் 20 பேர், சிகாகோ சென்று வர விமானக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ. 60 லட்சத்து 9 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :