உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை

Home

shadow

வெளிநாட்டு அருங்காட்சியங்களில் உள்ள தமிழக கோவில் சிலைகளை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள தமிழக கோவில் சிலைகளை மீட்பதர்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா அருங்காட்சியகத்தில் மட்டுமே 7 சிலைகள் உள்ளதாகவும் அவற்றை மீட்க ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக கோவில் சிலைகளை மீட்க, சம்பந்தப்பட்ட நாடுகளுடனான நட்புறவு பாதிக்கப்படாத வகையில் உரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :