ஊட்டி - சுற்றுலா பயணிகள் வருகை

Home

shadow


உதகையில் கோடை சீசன் கலைக் கட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கபடும் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உதகையில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. பூங்காவின் புல் தரைகளில் குடும்பத்துடன் விளையாடிய சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

இது தொடர்பான செய்திகள் :