எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பான தீர்ப்பின் முழு விவரத்தை படித்த பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும்

Home

shadow

   

        மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பான தீர்ப்பின் முழு விவரத்தை படித்த பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களது நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இன்று உத்தரவிட்டது. மேலும எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நியமன சட்ட மன்ற உறுப்பினர் சாமிநாதன், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றார். 

இது தொடர்பான செய்திகள் :