எம்.எல்.ஏ.க்கள் வழக்கு ஒத்திவைப்பு

Home

shadow

 

        தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :