ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளார்

Home

shadow

                                         ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். கைத்தறி தொழிலாளர்கள், விவசாயிகள், பட்டாசு தொழிலாளர் உள்ளிட்டோருக்கு இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கபட உள்ளது. இதன் மூலம் கிராம புறங்களில் 35 லட்சம் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 குடும்பங்களும் என மொத்தம் 60 லட்சம் ஏழை குடும்பத்தினர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :