ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு

Home

shadow

 

குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுநர்களுக்கு தற்போது கவனக்குறைவு என்ற பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது போதாது என்றும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இது குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துவதை கொடூரமான கொலைக் குற்றமாக கருதி  தண்டனை அளிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை  அமைச்சகத்திற்கு பரிந்துரைந்துள்ளது. அதனடிப்படையில், தண்டனையை 7 ஆண்டுகளாக அதிகரித்து சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் வாகனங்களை பதிவு செய்யும்போதே 3-ம் நபருக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :