கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Home

shadow

                                            தமிழ் புத்தாண்டு தினத்தினையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது

சித்திரை திருநாளான தமிழ்புத்தாண்டு தினம் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இதன் ஒரு பகுதியாக  கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சிநடைபெற்றது.  காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் ஆன்மீகம் கலந்த பக்தி இன்னிசை பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் தமிழ்த்தென்றல் வீ.ரா.ஸ்வேதா காயத்திரியின் தேவார பக்தி இன்னிசை நிகழ்ச்சியும்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி இன்னிசையையும், தேவார பக்தி இன்னிசைகளையும் கண்டு ரசித்தனர்..

இது தொடர்பான செய்திகள் :