கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது

Home

shadow

   கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்  செய்யப்படுகிறது. இதில் சுயேச்சை உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26-ந் தேதி கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போனது. இந்த நிலையில் எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்று  பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதித்ததை  அடுத்து அமைச்சரவையை விரிவுபடுத்த அமித்ஷா அனுமதி வழங்கினார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணிக்குள் கவர்னர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதையொட்டி, பெங்களூரு ராஜ்பவனை சுற்றியுள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :