கர்நாடகாவில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து - 4 வது நாளாக தொடரும் மீட்பு பணி

Home

shadow

       கர்நாடகாவில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தர்வாட்டில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று கடந்த செவ்வாய்க் கிழமை அன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டத்தில் இருந்தவர்கள், அங்கு பணிப்புரிந்தவர்கள் என பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறதுஇந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 14-ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 56 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 பேரை தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற மீட்பு பணியின் போது, அக்கட்டடத்தின் காவலாளி இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :