கல்லூரி மாணவிகளிடம் அலைபேசியில் தவறாக பேசிய நிர்மலாதேவி நீதிமன்றத்தில் மனு

Home

shadow

 

       கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளிடம் அலைபேசியில் தவறாக பேசிய அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூவரும் நீதிபதி லியாகத் அலி முன்பு இன்று விசாரணைக்கு ஆஜர்படுத்தபட்டனர். அப்போது தங்களுக்கும் இந்த வழக்கிற்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் மூவரையும் வழக்கிலிருந்து விடுவிக் வேண்டும் என்று கோரி அவர்களது வழக்கறிஞர்கள் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்னர்.

இது தொடர்பான செய்திகள் :