கள்ளக்குறிச்சி – சாலை மறியல்

Home

shadow

கள்ளக்குறிச்சிமாவட்டம், ஒகையூர்கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் அமைப்பதற்காக 2018ஆம் ஆண்டு பள்ளம் தோண்டப்பட்டது. கிராம மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்ற தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க அனுமதிப் பெற்று போலீசார் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள்செல்போன் டவர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.. மேலும் செல்போன் டவர் அமைக்கப்பட்டால், கதிர்வீச்சு காரணமாக உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் பாதிப்பு அடைவார்கள் என்று வேதனை தெரிவித்தனர்..

இது தொடர்பான செய்திகள் :