காஞ்சிபுரம் - ரவுடி கைது

Home

shadow

மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபாலனின் உறவினரான ரவுடி தனிகா மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.. தலைமறைவாக இருந்த தனிகாவை, தனிப்படை போலீசார் கடந்த ஆறுமாதங்களாக தேடிவந்தனர். இந்நிலையில் தனிகாகாசியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து தனிப்படை போலீசார் காசிக்கு சென்றனர். அங்கு ரவுடி தனிகா உள்ளிட்ட 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான தனிகா தற்போது கைது செய்யப்பட்டுள்ளர். 

இது தொடர்பான செய்திகள் :