காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை மேம்பாடு - முதல்வர் அறிவிப்பு

Home

shadow


                  காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 120 கோடியில் மேன்மை மையம்  - சட்டப்பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 120 கோடியில் மேன்மை மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். 
 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்ற அறிவிப்புகள்:

சேலம் சுகாதார மாவட்டத்தை பிரித்து புதிதாக ஆத்தூர் சுகாதார மாவட்டம் உருவாக்கப்படும்.

ரூ.600 கோடியில் புதிதாக 2000 பேருந்துகள் வாங்கப்படும். 

விபத்துக்களில் காயம் அடைபவர்களுக்கான  தீவிர சிகிச்சை மையம் 32 மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.

296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ. 79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரூ.67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

இது தொடர்பான செய்திகள் :