காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா

Home

shadow

 

        புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்திபெற்ற ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது, இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம்  பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 7 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய நாளான இன்று ஸ்ரீகைலாசநாதர்-ஸ்ரீ சுந்தராம்பிகை திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பாரம்பரிய செண்டைமேளம் மற்றும் நாதஸ்வர இசையோடு நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :