காரைக்கால் இலங்கை மீனவர்கள் கைது

Home

shadow


கோடியக்கரை அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் பிலான் மதுராங் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு வடக்கே சுமார் 50 மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய கடலோர காவல் படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

      கோடியக்கரை அருகே வரும் போது படகு பழுதானதால் விசைப்படகு காற்றின் திசையில் கோடியக்கரை பகுதியில் வந்த போது இந்திய கடலோர காவல் படை தங்களை கைது செய்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பான செய்திகள் :