காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி – தென்மேற்கு பருவமழை காரணமாக அதிகரிக்க வாய்ப்பு

Home

shadow


              தென்மேற்கு பருவமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலைகளின் மின் உற்பத்தி அதிகரிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், ராதாபுரம், இருக்கன்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகின்றன.
இப்பகுதிகளில் ஓராண்டில் 9 மாதங்கள் தொடர்ந்து காற்று வீசுவதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி சீராக நடைபெற்றுவருகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தாண்டு மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :