காவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி உத்தரவு

Home

shadow

               காவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி  உத்தரவு 

               ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரிய குழுவை தொடங்க, அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

               2018-19 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, தமிழக டிஜிபி ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், கிரேட்டர் சென்னை, நகரங்கள் மற்றும் மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்குமாறு தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில், காவல் தலைமையகத்தில் உள்ள துணை ஆணையர் தலைமையிலும், மாவட்டங்களில், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலும் குழு அமைக்குமாறு கூறியுள்ளார். 

             இந்த குழுவில், இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்றும், கௌரவ உறுப்பினர்களாக ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரிய குழுவை அமைத்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களை ஆலோசித்து, வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற காவலர்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் டி.ஜி.பி. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :