காஷ்மீரை எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாமல், சுற்றலா பயணிகள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியா ஷெட்டி

Home

shadow

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அழகிய நகரமான காஷ்மீரை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சுற்றி பார்க்கவும், ரசிக்கவும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுவது தவறு என்றும், எல்லையில் தான் பாதுகாப்பு குறித்த பதற்றங்கள் நிலவி வருவதாக விளக்கம் அளித்தார். காஷ்மீரில் பயங்கரவதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற செய்திகள், அதிக அளவில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதில் தவறான அச்சத்தை ஏற்படத்திவிட்டதாக கூறினார். காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :