கீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி – நூற்றுக்கணக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு

Home

shadow

                   கீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி – நூற்றுக்கணக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு

             கீழடியில் நடைபெற்று வரும் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில், நூற்றுக்கணக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நான்கு கட்டங்களாக  அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. இதில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருள்கள், சுடுமணல் சிற்பம் உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கின. இந்த பணிகள் தற்போது 5 ஏக்கர் அளவில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி பழங்கால மனிதர்கள் வாழ்ந்த வீடுகளின் இரட்டை சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல் தற்போது சுடுமண் பொருள்கள், பாசிமணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :