குடிசைகள் இல்லா மாநகராக சென்னை

Home

shadow

குடிசைகள் இல்லா மாநகராக சென்னையை மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் - விளையாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய 3 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையை குடிசைகள் இல்லாத மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக பெரும்பாக்கம் பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு 8 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அங்குள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் கட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஓ.பன்னீசெல்வம்வழிபாட்டுத்தலங்களை கட்டித் தருவது அரசின் கடமையல்ல என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :